தர்மதுரை டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி

201605052002196115_vijay-sethupathi-finished-dharmadurai-dubbing_SECVPFவிஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளியான ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக இவரது நடிப்பில் ‘இறைவி’, தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘இறைவி’ மே 20ம் தேதி வெளியாகவுள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதி தனது டப்பிங்கை இன்று பேசி முடித்துள்ளார்.

இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, ‘தர்மதுரை’ படத்தின் டப்பிங் பணிகள் இன்றோடு முடிந்துவிட்டது. என்னுடைய செல்வன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி’ என்று கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online