மீண்டும் இணையும் காக்க காக்க கூட்டணி

201605041845568595_Kakka-Kakka-team-again-joining_SECVPFகவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ படம் சூப்பர் ஹிட்டானது. போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யாவிற்கு இப்படம் நல்ல பெயர் பெற்று தந்தது. இதில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருந்தார்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது கலைப்புலி தாணு தயாரிப்பில் கவுதம் மேனன் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பிறகு தாணு தயாரிப்பில் புதிய படம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பதை இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

தாணு தயாரிப்பில் சமீபத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் வெளியானது. இப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக ‘கபாலி’ படம் வெளியாகவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online