லட்சுமி மேனனுடன் றெக்க கட்டி பறக்க தொடங்கிய விஜய் சேதுபதி

201605061924049743_vijay-sethupathi-lakshmi-menon-joins-rekka-movie-shooting_SECVPFவிஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘இறைவி’ படம் மே 20ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. “றெக்க” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ரத்தின சிவா இயக்குகிறார். டி.இமான் இசையமைக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மேலும் ‘வேதாளம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online