‘உன்னோடு கா’ படத்துக்கு சத்யா இசை அமைத்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்ட போது….
“இந்த படத்தில் ‘ஓடிட்டாங்க’ என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. மனோ மற்றும் கிருஷ்ணா ராஜ் இருவரும் 15 வருடங்கள் கழித்து இந்த பாடலில் இணைந்துள்ளனர்.”
“இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என் மகள் வைமித்ரா பாடியுள்ள ‘ஊதே ஊதே’ பாடல். அபிராமி ராமநாதன் பேத்தி மீனாட்சி இந்த பாடலில் நடித்துள்ளது, படத்தின் சிறப்பம்சம்.
முழுக்க முழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு மதன் கார்கியின் தனித்துவமான வரிகள் மேலும் அழகு சேர்த்துள்ளது. ரா என்னும் தமிழ் வார்த்தையை தா போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசிப்பதில் இருந்து கோரஸ் பாடும் வரை அனைத்தும் குழந்தைகள் தான்.
உலகளவில் பியானோ இசை வாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்ஷினி, சிம்போனி இசையில் வயலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்த பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர்.
பாடலின் குரலுக்கு சொந்தகாரர்களான சிந்தியா, சஜினி, சாஷ்வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் நிச்சயம் பாடலின் மெல்லிசைக்கு தூணாக அமைந்து இருக்கின்றனர்.
இந்த பாடலுக்காக கிளாஸ்சிக்கல் கிட்டார் வாசித்த டெல்சி என்னும் சிறுவன், ஜாஸ் இசையில் கைதேர்ந்தவர் மட்டுமில்லாமல் முன்னணி இசை அமைபாளர்களுக்கும் இவர் வாசிப்பது குறிப்பிடத்தக்கது.
வயதிற்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இந்த குழந்தைகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்” என்றார்.