அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது

201605061215508518_Ajith-Veeram-Vedhalam-movie-remake-in-telugu_SECVPFஅஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த இரண்டு படத்தையும் ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருந்தார். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கே வழங்கியுள்ளார் அஜித்.

இந்நிலையில், ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடிக்க பவன் கல்யாண் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சர்தார் கப்பார் சிங்’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

அந்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் இந்த படங்களில் அவர் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ‘வீரம்’ படத்தை தெலுங்கில் ‘ஜில்லா’ இயக்குனர் நேசன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. பவன் கல்யாண் தற்போது தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபிறகு ‘வீரம்’ ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries