றிய பட்ஜெட் படங்களை ஆதரிக்க வேண்டும்: இயக்குனர் விக்ரமன்

201605061604193207_Should-support-small-budget-films-director-Vikraman_SECVPF‘எடால்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விக்ரமன் பேசும் போது… “எடால்… என்றால் எலிப்பொறி. இந்த படம், பார்க்கிற ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். நிறைய உற்சாகத்தை தரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்திற்கு ஜோ–ஸ்மித் இருவரும் இசை அமைத்திருக்கிறார்கள்.

புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் நாயகன், நாயகி இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு திரைப்பட சூழல் சிரமமாக இருக்கிறது. சின்ன படம் எடுக்கிறது ரொம்ப எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் ரிலீஸ் பண்றது ரொம்ப சிரமமாக இருக்கிறது. தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் 15 சிறிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்.

மாதத்தில் மூன்று வாரங்களாவது சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும். பண்டிகை காலங்களில் மட்டும் தான் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்று ஒரு விதிமுறையை விரைவில் அமல் படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் சின்ன படங்கள் பிழைக்க முடியும்.

சிறிய படங்கள்தான் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது. அதனால் இந்த சிறிய படங்கள் ஜெயிப்பது திரைப்படகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே எடால் போன்ற சிறிய பட்ஜெட் படங்களை ஆதரிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் ஸ்ரீஜர் நன்றி கூறினார். இயக்குனர், நடிகர் ரமேஷ் கண்ணா உள்பட படத்தின் கதாநாயகன் வெங்கட், கதாநாயகி யுவா, இசையமைப்பாளர் ஸ்மித் பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries