நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன்: உதயநிதி

201605081702182365_good-story-police-roles-will-act-Udayanidhi_SECVPFநடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மனிதன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த நிலையில் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:–

என் முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் ‘மனிதன்’. இந்த படத்தில் தான் நான் நடிப்பை வெளிகாட்டி உள்ளேன் என்று பலர் கூறுகின்றனர். இந்த படத்தை பார்த்து விட்டு எனது தந்தை என்னை கட்டி அணைத்து பாராட்டினார். உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழலில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நான் நடித்த ‘கெத்து’ படத்திற்கும் வரி விலக்கு வழங்கப்படாமல் தான் இருந்தது.

பல முறை கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அந்த படத்திற்கு வரி விலக்கு கிடைத்தது. அதுபோல் சட்ட ரீதியாக போராடிய பின்னர் தான் இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன். படத்தை தயாரித்து வெளியிடுவது தான் இப்போதைய கால கட்டத்தில் பெரிய சாதனையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online