சாதனை மேல் சாதனை படைத்து வரும் கபாலி டீசர்

201605081504348960_Kabali-teaser-record-break-again-in-youtube_SECVPFகடந்த மே 1-ந் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் வெளியான நாள் முதற்கொண்டு பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், தற்போது மேலும் மேலும் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகிறது.

இந்த டீசர் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், தற்போது இந்த டீசரை பார்த்தவர்களின் 1 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு வாரத்தில் இவ்வளவு பேர் ஒரு டீசரை கண்டுகளித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இப்படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries