திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன்தான் : விஷால் ஆதங்கம்

1462879329-4146 (1)திருட்டு விசிடியை தடுக்க நான் ஒருவன் தான் போராடி வருகிறேன் என்று விஷால் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

விஷால் நடிக்கும் மருது படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது விஷால் கூறியதாவது:-

அவன் இவன் படத்துக்கு பின்னர் நான் என்னை முழுமையாக அர்ப்பணித்த படம் மருது. இப்படத்தின் மூலம் காமெடி நடிகர் சூரி, குணச்சித்திர நடிகராக வலம் வருவார். நான் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்துள்ள முதல் படம் இது. இப்படம் மே-20ஆம் தேதி வெளியாகிறது.

திருட்டு விசிடிக்கு எதிராக நான் ஒருவன் தான் இன்றுவரை தனியாளாகப் போராடி வருகிறேன். என்னுடைய படங்களுக்கு மட்டும் அல்லாமல், எல்லா நடிகரின் படங்களுக்காகவும்தான் போராடி வருகிறேன்.

மே-20 ஆம் தேதி வெளியாகும் மருது படத்துக்கும் கட்டாயம் திருட்டு விசிடி வெளியிடுவார்கள், அப்போது என் நண்பர்களுடன் களம் இறங்குவேன். திருட்டு விசிடியைக் கண்டுப்பிடித்தால் நிச்சியமாக அதைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online