கபாலி முதல் காட்சியை பார்க்க ஆசை: அக்‌ஷய் குமார்

201605121657195887_Akshay-Kumar-desire-rajini-kabali-movie-first-day-show_SECVPFபிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தின் பாடல்களை வெளியிடுவதற்காக சென்னை வந்தார் அக்‌ஷய் குமார்.

இங்கு படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ், நாயகி கயல் ஆனந்தி, இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் லைகா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராஜூ மகாலிங்கம் ஆகியோருடன் படத்தின் பாடல்களை அக்‌ஷய் குமார் வெளியிட்டார். பின்னர் ராஜூ மகாலிங்கம் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் டீசரை போட்டு காண்பித்திருக்கிறார்.

டீசரை பார்த்த அக்‌ஷய் குமார் ஆச்சரியம் அடைந்திருக்கிறார். மேலும் ‘கபாலி’ படம் ரிலீஸ் தினத்தில் மீண்டும் சென்னைக்கு வந்து ரசிகர்களோடு ரசிகராக முதல் நாள் காட்சியை பார்க்க ஆசையாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries