சிபிராஜுடன் இணைந்த இயக்குனர் நலன் குமாரசாமி

201605112121517761_Director-nalan-kumarasamy-joins-with-sibiraj_SECVPF‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவ்விரு படங்களிலும் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான கதைகளம் கொண்டு வெளியான இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தையும் பெற்று தந்தது.

இயக்குனராக பெயர் பெற்ற இவர் தற்போது நடிகர் என்ற பெயரை வாங்க இருக்கிறார். அதாவது, மணி செய்யோன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்து வரும் படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நலன் குமாரசாமி மீன் மருத்துவராக நடித்திருக்கிறார்.

கதையை கேட்ட உடனே நடிக்க ஒப்புக்கொண்ட நலன், தன்னுடைய கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடித்து முடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிபிராஜ், நலன் மட்டுமல்லாது ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, லிவிங்ஸ்டன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries