ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் வருங்கால திருடர்கள்: ஏ.ஆர்.முருகதாஸ்

201605111813373781_vote-given-money-futures-thieves-ARMurugadoss_SECVPF‘அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது’ என்று தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. என்றாலும், ஓட்டுக்கு பணம் கொடுக்க பல்வேறு வகையிலும் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி படை வீரர்களையும், துணை ராணுவத்தையும் தேர்தல் கமிஷன் பயன்படுத்தி வருகிறது.

பல்வேறு தரப்பினரும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் விமர்சனம் செய்து வருகிறார்கள். பிரபுதேவா குழுவினர் காசு வாங்குவது தவறு என்பதை வற்புறுத்தி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள அவர்….

மே 16–ந்தேதி ஓட்டுப் போடுவதுதான் அனைவருக்கும் முதல் வேலையாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் வருங்கால திருடர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries