ஆண்டவன் கட்டளை காக்கா முட்டைபோல் இருக்காது

1463131877-6134காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் அடுத்து விதார்த் நடிப்பில் குற்றமே தண்டனை படத்தை இயக்கினார்.

ஒரு கொலையும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களையும் பற்றிய கதை. படம் தயாராகி பல மாதங்களாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் ஆண்டவன் கட்டளை படத்தை எடுத்து வருகிறார். விசா வழங்குவதில் உள்ள சிக்கல்கள், முரண்கள், குளறுபடிகளை இப்படம் சொல்வதாக பேச்சு உள்ளது. தூதரகம் போன்ற அரங்கு அமைத்து தற்போது காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இந்தப் படம் பற்றி கூறிய மணிகண்டன், “காக்கா முட்டை படம் போல ஆண்டவன் கட்டளை திரைப்படம் இருக்காது. யதார்த்தத்தை மீறாத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும். சாதாரண மனிதன் பார்வையில் இந்த அமைப்பின் மீது இருக்கும் பிரச்சினைகளை இப்படம் பேசும்.

வழக்கமாக நீங்கள் பார்க்கும் நாயகி போல ரித்திகா சிங் இப்படத்தில் இருக்க மாட்டார். யோகி பாபு இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online