சந்திரமுகி 2 – ரஜினி வெளியே வடிவேலு உள்ளே

1463118562-6649பி.வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கவில்லை. அதேநேரம், சந்திரமுகியில் ரஜினியுடன் நடித்த வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கன்னடத்தில் தனது இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற சிவலிங்கா படத்தை தமிழில் ரஜினி நடிப்பில் சந்திரமுகி 2 ஆக எடுக்க பி.வாசு திட்டமிட்டார்.

ஆனால், ரஜினி அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் ரஜினிக்குப் பதில் லாரன்ஸை வைத்து சிவலிங்காவை தமிழில் ரீமேக் செய்கிறார். படத்துக்கு சந்திரமுகி 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சந்திரமுகியில் காமெடிக் காட்சியில் கலக்கிய வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

பிற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries