போட்டியை நான் விரும்புகிறேன்: சமந்தா

201605141910009246_Samantha-says-I-like-competition_SECVPFதமிழ், தெலுங்கில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் சமந்தா. வெயில் கொடுமையை தாங்க முடியாமல், புதிய படங்களில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். ஏற்கனவே உள்ள படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ரசிகர்களுடன் சமந்தா டுவிட்டரில் உரையாடினார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார், அவர் அளித்த பதில்கள் இதோ…

நான் வெற்றி தோல்வியை சமமாக பார்க்கிறேன். திரை உலகுக்கு வந்த பிறகுதான் எனது வாழ்க்கையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

என் படத்தின் வர்த்தக ரீதியான வெற்றியும், நல்ல விமர்சனமும் எனக்கு பிடிக்கும். எப்போதும் வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

நான் போட்டியை விரும்புகிறேன். அது எனக்கு உத்வேகத்தை கொடுக்கும். என்னுடன் போட்டியிடுபவர்களின் பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. கடினமான உழைப்புதான் என் வெற்றியின் ரகசியம்.

இப்போது என் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறேன். என் வீடுதான் எனக்கு சிறந்த இடம். தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களும் பெரிதாக கனவு காண வேண்டும். சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பதில் அளித்த சமந்தா, “தேர்தல் பற்றி கேட்ட கேள்விக்கு, தயவு செய்து ஓட்டுப்போடுங்கள்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries