விக்ரம் பிரபுவுக்காக மீண்டும் தாறுமாறு பாடலை பாடிய சிம்பு

201605141342556907_Simbu-sung-again-tharumaru-song-for-Vikram-Prabhu_SECVPFசிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘வாலு’. இதில் ஹன்சிகா சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் ‘தாறுமாறு’ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. டி.ராஜேந்தர் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தாறுமாறு என்ற பாடலை தற்போது சிம்பு பாடியிருக்கிறார்.

ஆனால், அவருக்காக அல்ல விக்ரம் பிரபுவுக்காக பாடியிருக்கிறார். விக்ரம் பிரபு தற்போது ‘வீர சிவாஜி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெறும் ‘தாறுமாறு’ என்ற பாடலை சிம்பு பாடியிருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த பாடல், படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம்பிரபுவுடன் ஷாமிலி, ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கணேஷ் விநாயக் இந்த படத்தை இயக்கி வருகிறார். எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online