கமல் படத்தில் மீண்டும் தூங்காவனம் இயக்குனர்

201605141227032164_kamal-film-again-thoongavanam-director-acting_SECVPFகமல் நடிக்கும் புதிய படம் “சபாஷ் நாயுடு”. மலையாள பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இந்த படத்தில் சுருதிஹாசனும் நடிக்கிறார்.

இதன் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. இதனால் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஜூன் கடைசியில் இவர்கள் நாடு திரும்புகிறார்கள். இந்தியாவில் 20 சதவீத படப்பிடிப்பு நடக்கிறது. ஜூலை மாதத்துக்குள் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து கமல் மீண்டும் தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பல படங்களில் கமலிடம் உதவியாளராக பணிபுரிந்த ராஜேஷ் எம்.செல்வா இப்போது “சபாஷ் நாயுடு” படத்தில் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

அடுத்து இவர் இயக்கும் கமல் படத்தின் வேலைகளை ஆகஸ்டு மாதம் தொடங்குகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries