மீரா ஜாக்கிரதை பற்றி பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார்

201605152202533533_Bobby-simha-has-complained-to-nadigar-sangam-for_SECVPFபாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கோ 2’. சரத் இயக்கியுள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்போது இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பாபி சிம்ஹாவின் ‘மீரா ஜாக்கிரதை’ என்னும் படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாபி சிம்ஹா நடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ‘நான் கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்த நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பதிவு எண் 7871. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொறுட்டு சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக தினசரி நாளிதழில் நான் யார் என்று கேள்வி படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் ‘மீரா ஜாக்கிரதை’ என்னும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான ‘உறுமீன்’ படத்தின் ஸ்டில்களை பயன் படுத்துகின்றனர்.

நான் ‘மீரா ஜாக்கிரதை’ என்ற படத்தில் நடித்ததும் இல்லை. டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகியாக கூறப்படும் மோனிகா அவர்களை நேரில் கூட பார்த்ததும் இல்லை.

ஆகவே மேற்படி நான் கூறிய தகவல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கித்தறும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries