முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நாசரை அழைக்காதீர்கள்: மனைவி வருத்தம்

201605152111241682_Plz-dont-cast-nasser-in-role-invisible-film-nasser-wife_SECVPFதென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருப்பவர் நாசர். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். சிறு வேடம் என்றாலும் சிறப்பாக செய்யக் கூடியவர். இவருடைய நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவிற்கு இவருடைய நடிப்பு பலராலும் பாராட்ட பட்டிருக்கிறது.

கடந்த வாரம் வெளியான ‘கோ 2’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நாசர். இதில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பாலசரவணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சரத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், நாசர் மனைவி தன் கணவரின் கதாபாத்திரம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘படத்தில் முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க தயவு செய்து நாசரை அழைக்க வேண்டாம். ‘கோ 2’ படம் குறித்து எனக்கு வரும் அழைப்புகளால் இதை தெரிவிக்கிறேன். நட்புக்கு மரியாதை கொடுங்கள்’ என்றார்.

நாசரின் ரசிகர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் பலர் அவரது மனைவியிடம் தொலைபேசி மூலம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்ததன் காரணமாக அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries