சுந்தர் சி.யின் முத்தின கத்திரிக்கா இம்மாதம் வெளியீடு

201605151749482674_Sundar-C-muthina-kathirika-this-month-release_SECVPFசுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 2’ வெளியானது. பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தை இயக்காமல், தன்னுடைய உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

‘முத்தின கத்திரிக்கா’ என்ற பெயரிடப்பட்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘வெள்ளி மூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் சுந்தர்.சிக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வைபவ், சதீஷ், வி.டி.வி.கணேஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மேலும் இப்படம் இம்மாதம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுந்தர்.சி. தனது அவ்னி சினிமாஸ் மூலம் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries