இது நம்ம ஆளுக்கு விடிவு காலம் பிறந்தாச்சு

201605151408510413_Simbu-Nayanthara-starrer-INA-movie-release-date-confirmed_SECVPFசிம்பு-நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. காதல் முறிவுக்கு பிறகு சிம்புவும் நயன்தாராவும் இணைந்து படம்.

சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள படம். இப்படி எண்ணற்ற சிறப்பம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டே வந்தது.

இப்படத்திற்கு பல ரீலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் வெளியாவது தள்ளிக் கொண்டே சென்றது. இந்நிலையில், தற்போது வருகிற ஏப்ரல் 27-ந் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகையும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online