விஜய்யுடன் 3-வது முறையாக இணைந்த எமிஜாக்சன்

201605151905410541_Amy-jackson-3rd-time-joins-with-Vijay_SECVPF‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமிஜாக்சன். இவருடைய நடிப்பு இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

இப்படத்தையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தாண்டவம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.எல்.விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் எமி ஜாக்சனும் நடித்துள்ளார்.

தற்போது ஐதராபாத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இதில் பிரபுதேவாவுடன் எமி ஜாக்சன் நடனமாடியிருக்கிறார். ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனுடன் நான் நடனமாடியிருக்கிறேன்’ என்று எமி ஜாக்சன் பெருமையாக கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries