எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஸ்ருதி

1463488272-4809எஸ்.ஜே.சூர்யா இயக்கும் தெலுங்குப் படத்தில் நாயகியாக ஸ்ருதி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்கம், நடிப்பு என்று மிக்சாகி எதுவும் செட்டாகாமல் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பவன் கல்யாணை வைத்து இதற்கு முன் குஷி (தமிழ் குஷியின் ரீமேக்) புலி ஆகிய படங்களை எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ளார்.

முதல் படம் ஹிட், இரண்டாவது ப்ளாப். மூன்றாவதாக தற்போது அவர் இயக்கிவரும் படம், குஷி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது. ஆனால், இரண்டாம் பாகம் கிடையாது என ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இயக்குனராக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் சூர்யா இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online