மீண்டும் அனுஷ்காவுடன் இணையும் அஜித்

1463476612-0532சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் இரு நாயகிகள். அதில் ஒருவர் அனுஷ்கா என தகவல்கள் கூறுகின்றன. அனுஷ்காவுடன் இது குறித்து தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அனுஷ்கா தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அஜித் படத்திற்கு தேவைப்படும் நாளில் கால்ஷீட் இருந்தால் அனுஷ்கா நிச்சயம் நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை அனுஷ்கா நடிப்பது இறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன் கௌதம் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் அனுஷ்கா நடித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online