செம போத ஆகாத – போதை பாட்டுக்கு ஆக்ஷன் சீக்வென்ஸ்

1463569482-0512அதர்வா தயாரித்து நடித்துவரும் படம், செம போத ஆகாத. அதர்வாவின் முதல் படம், பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இசை யுவன்.

விரைவில் யுவன் இசையில் தயாரான பாடல் ஒன்றை வெளியிடுகின்றனர். இந்தப் பாடலை கர்நாடகாவில் உள்ள பாபா புதங்கிரி மலைப்பகுதியில் படமாக்கியுள்ளனர்.

பொதுவாக பாடல் காட்சி என்றால் நடன் இயக்குனரைத்தான் அழைத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட இந்தப் பாடலை படமாக்க பத்ரி அழைத்துச் சென்றது, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பாராயனை.

பாடல் காட்சியில் நடன அசைவுக்குப் பதில் முழுக்க அதர்வாவின் ஆக்ஷன் காட்சிகளாக வைத்திருக்கிறார்கள். பாடலும், படமாக்கிய விதமும் பரவலாக கவனிக்கப்படும் என்றார் பத்ரி வெங்கடேஷ்.

பாடல் எப்போ ரிலீஸ்…?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online