காஜல் அகர்வாலை வைத்து நடத்தப்படும் முத்த வியாபாரம்

1463555440-0557காஜல் அகர்வால் இந்தியில் ஒரு படம் நடித்துள்ளார். படத்தின் பெயர், Do Lafzon Ki Kahani. ரன்தீப் ஹுடா நாயகன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு பிரஸ் ரிலீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போது காஜல் அகர்வால், ரன்தீப் ஹுடாவின் லிப் லாக் காட்சியை படமாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தி சினிமாவில் லிப் லாக் காட்சிகள் சாதாரணம்.

எனில் காஜலின் முத்தத்திற்கு மட்டும் ஏனிந்த ஸ்பெஷல்…?

காஜல் அகர்வால் இதுவரை முத்தக் காட்சியில் நடித்ததில்லை. அது என்னவென்றே அவருக்கு தெரியாது. மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போதும், படத்தில் முத்தக் காட்சி இருப்பது அவருக்குத் தெரியாது.

ரன்தீப் ஹுடா காஜலை திடீரென்று அணைத்து உதட்டில் முத்தமிட்ட போது காஜல் அகர்வால் அதிர்ந்து போனார் என்று பூகம்பம் அளவுக்கு பிரஸ் ரிலீஸில் விலாவரியாக விவரித்துள்ளனர்.

அவர்கள் லிப் லாக் காட்சியை பிரதானப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், அவர்கள் படத்தை விளம்பரப்படுத்த இந்த முத்தக் காட்சியை துருப்புச்சீட்டாக பயன்படுத்தியிருப்பது தெரிகிறது.

ஆனால், உண்மை என்ன?

காஜல் அகர்வால் இதற்கு முன் பல படங்களில், பல நடிகர்களுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். தெலுங்கின் இரண்டாம் வரிசை நாயகனாக இருக்கும் சந்தீப்புடன் ஒரு முத்தக் காட்சியில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். படம் சந்தமாமா. செம ரொமான்டிக்கான முத்தக் காட்சி அது.

அதேபோல் அல்லு அர்ஜுனுடன் ஒருமுறை தனது உதட்டை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஈர சம்பவம் நடந்தது ஆரியா 2 படத்தில். இரண்டு பேரும் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டனர். காதலும், அதிர்ச்சியும் சமவிகிதத்தில் கலந்த க்யூட் லிப் லாக் இந்த முத்தம்.

பிசினஸ்மேன் படத்தில் தனது பங்குக்கு காஜலின் உதட்டை கறைபடுத்தினார் ஆந்திராவின் பிரின்ஸ், மகேஷ் பாபு. சந்தீப் அளித்த முத்தத்திற்கு இணையான ரொமான்டிக் முத்தம் இது.

மாற்றான் படத்தில் சூர்யாவும் காஜல் அகர்வாலை முத்தமிட்டுள்ளார். ஏறக்குறைய இரண்டு லாரிகள் மோதிக் கொள்வதைப் போன்றது இந்த முத்தக் காட்சி. ரொமான்ஸைவிட அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்தது இந்த முத்தக் காட்சி.

நமக்கு தெரிந்து இத்தனை. தெரியாமல் எத்தனையோ.

தென்னிந்திய சினிமாவில் முத்தத்தில் நவரசங்கள் காட்டிய காஜல் அகர்வாலை, முதல் முதலில் முத்தமிட்டது ரன்தீப் ஹுடா, அவர் முத்தமிட்டதும் காஜல் அகர்வால் அதிர்ந்தார், அதிசயித்தார் என்றெல்லாம் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது இந்திப்பட நிறுவனம்.

ஜுனில் காஜல் நடித்த இந்திப் படம் வெளியாக உள்ளது. அதற்குள் இன்னும் எத்தனை மூட்டைகளை அவிழ்த்துவிடுவார்களோ.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries