ஜி.வி.பிரகாஷுடன் மூன்றாவது முறையாக இணையும் ஆனந்தி

201605181931213956_GV-Prakash-and-Anandhi-joins-third-time_SECVPF‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கயல் ஆனந்தி. இந்த படத்தில் இந்த ஜோடியின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த ஜோடி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவிகா கோர் என்னும் பாலிவுட் நடிகையும் நடித்து வந்தார். இந்நிலையில், அவிகா கோருக்கு பதிலாக கயல் ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries