விரைவில் துவங்குகிறது சாட்டை – 2

201605181802382305_Saattai-2-movie-shooting-soon-starting_SECVPFமைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தற்போது ‘பொட்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இதில் பரத், நமீதா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்தை அம்ரீஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து சாட்டை படத்தின் இரண்டாம் பாகமான “சாட்டை – 2’ படத்தையும் தயாரிக்கிறார்கள். ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் நடித்த கிஷோர் மற்றும் தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பல இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்த கெளதம் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online