பொறுக்கி டூ போலீஸ் அதிகாரி

1463747321-6071பொறுக்கி டூ போலீஸ் அதிகாரி… இதுதான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரது வெற்றி பாதையாக இருந்திருக்கிறது.

ரஜினி முதல் சத்யராஜ்வரை பலரும் வில்லனாக நடித்தே நாயகன் அந்தஸ்தை பெற்றனர். பாபி சிம்ஹாவும் அப்படியே.

ஜிகிர்தண்டா படத்தில் அவர் நடித்த அசால்ட் சேது கதாபாத்திரமே அவரை பல படங்களில் நாயகனாக்கியது. பொறுக்கியாக பல படங்களில் நடித்தவர் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

கோ 2 படத்தை இயக்கிய சரத்தின் அடுத்தப் படத்திலும் பாபி சிம்ஹாவே நாயகன். கோ 2 பொலிடிகல் த்ரில்லர் என்றால் இந்த புதிய படம் ஆக்ஷன் த்ரில்லர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பாபி சிம்ஹா முதல்முறையாக போலீஸாக நடிக்க உள்ளார்.

பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online