‘ஈட்டி’, ‘கணிதன்’ படத்திற்கு பிறகு அதர்வா ‘ருக்குமணி வண்டி வருது’, ‘செம போத ஆகாத’ படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து கூறிய அவர்….
நான் உடலை வருத்தி கடுமையாக உழைத்த படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளன. எனவே, இனி நடிக்கும் எல்லா படங்களுக்கும் என்னை மிகவும் தயார் செய்து வருகிறேன். எனது உடல் உழைப்பையும், கவனத்தையும் அதிகம் செலுத்தி வருகிறேன்.
‘பரதேசி’ படத்துக்காக நான் மிகவும் உழைத்தேன். இயக்குனர் பாலா சொன்னபடி தினமும் படப்பிடிப்புக்கு முன்பாக வீட்டில் வைத்தே நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு என்னை தயார் செய்து நடித்தேன்.
கடுமையாக உழைத்த அந்த படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அது போல் ஈட்டி படத்துக்காக உடற்பயிற்சி செய்து ‘சிக்ஸ்பேக்’ உடல் கட்டுக்கு என்னை மாற்றி நடித்தேன்.
அதற்கும் நல்ல பலன் கிடைத்தது. இது போல் இப்போது ஒவ்வொரு படத்துக்கும் என்னை தயார் செய்கிறேன் என்றார்.