தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் மீனா

201605211934383761_Meena-new-avatar-as-producer_SECVPFதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தில் அவருக்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், மீனா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் கமல்ஹாசன், மகேஷ்பாபு, தனுஷ் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தையை அவர் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக மீனா தயாரிக்கும் முதல் படத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online