ரஜினியுடன் நடித்தது எனது அதிர்ஷ்டம்: ராதிகா ஆப்தே

201605211259009109_Rajini-with-acting-My-luck-Radhika-Apte_SECVPFரஜினியின் ‘கபாலி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.

இவர்களுடன் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், மைம்கோபி, தன்ஷிகா, ரித்விகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இளம் நடிகர், நடிகைகளுடன் நடித்தாலும் அவர்களுடன் ரஜினி பாகுபாடு இல்லாமல் பழகினார். அனைவருடைய நடிப்பையும் ஊக்குவித்தார். ரஜினியை படக்குழுவினர் அனைவரும் பாராட்டினார்கள்.

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ராதிகா ஆப்தேவிடம் கேட்டபோது….

ரஜினியுடன் நடித்தது எனது அதிர்ஷ்டம். அவர் மிகவும் சாதாரணமாக நடித்தார். ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் நடித்து கொடுத்தார். அவரது நடிப்பு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அவருடன் சேர்ந்து நடித்த காட்சிகளில் இதை நான் உணர்ந்தேன்.

இதற்கு முன்பு பார்த்த ரஜினி படங்களில் இருந்து கபாலி மாறுபட்ட படமாக இருக்கும். ரஜினியை இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். நிச்சயம் கபாலி படத்தில் ரசிகர்களின் பார்வையில் ரஜினி பிரமிப்பாக தெரிவார் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online