விஜய்யுடன் இணையும் ஜெயம் ரவி

201605222049180507_Jayam-Ravi-joins-with-Vijay_SECVPFஜெயம் ரவிக்கு கடந்த வருடம் சிறப்பாக அமைந்தது. இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ ஆகிய படங்கள் வெளியானது. இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த வருடம் வெளியான ‘மிருதன்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் தற்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கி வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏ.எல்.விஜய் தற்போது பிரபுதேவா, தமன்னாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries