மீண்டும் சசிகுமாருடன் இணையும் முத்தையா

201605221653142923_Muttiah-again-joins-with-Sasikumar_SECVPF‘குட்டிப்புலி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதில் சசிகுமார் நாயகனாகவும், லட்சுமிமேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து, கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் ‘மருது’ படம் வெளியானது. இதில் விஷால், ராதாரவி, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த சசிகுமாரை வைத்து மீண்டும் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், சசிகுமார் தற்போது நடித்து வரும் ‘கிடாரி’ படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online