மகளுக்காக அர்ஜுன் உருவாக்கும் காதலின் பொன் வீதி

1463999453-4136மகன்களுக்காகத்தான் இதுவரை தந்தைகள் படம் தயாரித்தார்கள் இயக்கினார்கள். மகளுக்காக படம் எடுத்தவர் பாக்யராஜ்.

பாரிஜாதம் என்ற அந்த முதல் படத்தோடு பாக்யராஜின் மகள் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

தற்போது அந்த ரிஸ்க்கை அர்ஜுன் எடுத்துள்ளார்.

பட்டத்து யானை படத்தில் அறிமுகமான அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அதன் பிறகு படம் எதுவும் அமையவில்லை. அதனால், மகளுக்காக அர்ஜுனே ஒரு படத்தை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தும் அவரே.

காதலின் பொன் வீதியில் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ள படக்குழுவினர், தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்க இருக்கிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries