சிரஞ்சீவியின் 150 வது படத்தில் கேத்ரின் தெரேசா

1463996424-1294சிரஞ்சீவி நடிக்கும் 150 -வது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்படுகிறது. விநாயக் படத்தை இயக்குகிறார்.

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் ரீமேக்தான் சிரஞ்சீவியின் 150 -வது படம். படத்தின் நாயகி இன்னும் முடிவாகாத நிலையில், படத்தில் ஒரேயொரு பாடலுக்கு ஆட கேத்ரின் தெரேசாவிடம் கேட்டுள்ளனர்.

அவரும் சிரஞ்சீவியுடன் ஆட சம்மதித்துள்ளதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online