ஜுன் 9 சிவகார்த்திகேயன், அனிருத்தின் ஸ்பெஷல் கச்சேரி

1463993178-5517தனுஷ் – அனிருத் கூட்டணி, சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணியால் உடைந்துவிட்டது.

முன்னது உடைந்ததால் பின்னது பெவிகால் ஸ்ட்ராங்காக மேலும் உறுதிப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது ரெமோ படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகிவரும் ரெமோ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஜுன் 9 -ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளது. பர்ஸ்ட் லுக்குடன் படத்தில் பாடல் ஒன்றையும் வெளியிடுகின்றனர்.

இந்தப் பாடலை எழுதியவர், விக்னேஷ் சிவன். நானும் ரௌடிதான் படத்தில் அனிருத் இசையில், தங்கமே உன்னைத்தான் பாடலை எழுதியதும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்தான்.

அசத்தலாக தயாராகியுள்ள இந்தப் பாடல் ரெமோ படத்துக்கு சரியான அறிமுகமாக இருக்கும்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries