சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்து 2 படங்கள்

201605241748200305_Sivakarthikeyan-acting-back-to-back-2-films-generated_SECVPF‘ரஜினி முருகன்’ வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், பல சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜூன் 9ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடலையும் வெளியிட இருக்கின்றனர். இப்படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களை தவிர மேலும் இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்திலும், ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

வெற்றிபட இயக்குனர்களுடன் சிவகார்த்திகேயன் இணைய இருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online