விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கவில்லை: நயன்தாரா

Nayanthara-1தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகையென்றால் அது நயன்தாராதான். இவர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் இந்த வாரம் வெளிவரவிருக்கிறது. இதுதவிர, ‘கஸ்மோரா’, ‘திருநாள்’, ‘இருமுகன்’ ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாரா தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதில் நடிப்பதோடு, இப்படத்தை நயன்தாரா தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவியது. இதுகுறித்து நயன்தாரா கூறும்போது, நான் தயாரிப்பாளராக போவதாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையுமில்லை.

எனக்கு நடிப்பது மட்டும்தான் வேலை. அதுமட்டும்தான் எனக்கு தெரியும். எந்த படத்தையும் தயாரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries