அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

201605241221456555_Achcham-Yenbadhu-Madamaiyada-release-date-announced_SECVPFசிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படம் ஒருவழியாக வருகிற மே 27-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மற்றொரு படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும் விரைவில் வெளியிட தயாராகி வருகின்றனர்.

கவுதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் மொத்த பாடல்களையும் வருகிற ஜுன் 17-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜூலை 15-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு குறைந்த இடைவெளியில் இரட்டை விருந்து கொடுக்கவுள்ளார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online