உடல் எடையை கூட்டி குறைக்கும் அனுஷ்கா – தமன்னா

201605240826150527_Reducing-and-increasing-weight-Anushka-Tamanna_SECVPFதிரையுலகில் கடந்த சில வருடங்களாக கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தன. அவர்களை மையப்படுத்தியே கதைகளும் உருவாக்கப்பட்டன.

கதாநாயகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்பயிற்சிகள் செய்து தோற்றங்களை மாற்றிக்கொண்டு நடித்தார்கள். சிலர் ‘சிக்ஸ் பேக்’ உடல் கட்டுக்கும் மாறினார்கள். கதாநாயகிகள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி வருகிறது. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வருகின்றன.

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளுக்கு அதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. இதற்காக நடிகைகளும் கடும் உடற்பயிற்சிகள் உணவு கட்டுப்பாடுகள் மூலம் உடல் எடையை கூட்டி, குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

சில நடிகைகள் அதிரடி படங்களுக்காக குதிரை ஏற்றம், வாள் சண்டை பயிற்சிகள் எடுத்து நடிக்கிறார்கள். நடிகை அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை 20 கிலோ கூட்டி குண்டு பெண்ணாக வந்தார். தற்போது தனது அடுத்த படங்களுக்காக அந்த 20 கிலோவையும் குறைத்து ஒல்லியாக மாறும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

உடல் எடையை குறைப்பது குறித்து அனுஷ்கா கூறும்போது, ‘‘உடல் எடையை கூட்டுவது சுலபம். கண்டதையெல்லாம் சாப்பிட்டு எடையை ஏற்றி விடலாம்.

ஆனால் அதை குறைப்பது கஷ்டம். நான் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 20 கிலோ எடையை கூட்டி விட்டு இப்போது அதை குறைக்க மிகவும் கஷ்டப்படுகிறேன். இது வரை 8 கிலோதான் குறைத்து இருக்கிறேன். இன்னும் 10 கிலோ குறைக்க உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன் என்றார்.

நடிகை தமன்னா தனது புதிய படத்துக்காக உடல் எடையை கூட்டி வருகிறார். அவர் கூறும்போது, ‘‘நான் ஒல்லியாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். பாகுபலி படத்தில் உடல் எடையை கூட்டும்படி டைரக்டர் சொன்னார். அதற்காக கொஞ்சம் எடையை கூட்டினேன். அது ரசிகர்களுக்கு பிடித்தது.

தற்போது நான் நடிக்கும் அபிநேத்ரி படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இந்த படத்துக்காக 6 கிலோ எடையை கூட்டும்படி டைரக்டர் தெரிவித்தார். அதற்கேற்ப எடையை கூட்டி இருக்கிறேன்’’ என்றார். காஜல் அகர்வால் தனது அடுத்த படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries