சிவகார்த்திகேயனுடன் இணைந்த விக்னேஷ் சிவன்

201605241113214397_Vignsh-shivan-maiden-collaboration-with-sivakarthikeyan_SECVPFசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வேகமாக உருவாகிவரும் படம் ‘ரெமோ’. அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸ் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்துள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் டைட்டில் டிராக்கை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். விக்னேஷ் சிவன் ஏற்கெனவே அனிருத் இசையில் நிறைய பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்துக்கும் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளது ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த பாடல் ‘ரெமோ’ தலைப்புக்கு உத்வேகம் கொடுக்கும்படி இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரு வேறு கெட்டப்புகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று பெண் வேடத்திலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெண் வேடத்திற்கு இவரே டப்பிங் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

வருகிற ஜுன் 15-ந் தேதி இதற்கான டப்பிங் பணிகளில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஜுன் 9-ந் தேதி ‘ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்,டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online