ம்புவின் நடிப்பை பார்த்து வியந்த ஆண்ட்ரியா

201605261843191125_Andrea-impressed-Simbu-performances_SECVPFசிம்பு நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதில் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். டி.ராஜேந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விநியோகம் செய்துள்ளது.

சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இசையமைத்திற்கும் இந்த படத்தின் பாடல்கள் எற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை பற்றியும் சிம்புவுடன் நடித்த அனுபவத்தை பற்றியும் ஆண்ட்ரியா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

‘இது நம்ம ஆளு’ படம் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது. படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் ஆகி விடுவார். அவருடைய திறமை அபரிதமானது. ஒவ்வொரு காட்சியிலும் சிம்புவின் நடிப்பு திறனை கண்டு நான் வியந்து போகிறேன்.

எதார்த்தமான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கி இருக்கிறது ‘இது நம்ம ஆளு’ திரைப்படம். பொதுவாகவே வலுவிழந்த கதைகளில் முன்னணி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், எனக்கு கொஞ்சமும் கிடையாது.

சிறிய வேடமாக இருந்தாலும் வலிமையான கதையம்சத்தில் நடிப்பதை தான் நான் பெரிதும் விரும்புகிறேன். அந்த வகையில் இது நம்ம ஆளு படம் எனக்கு பக்கபலமாக அமையும் என்று நம்புகிறேன்” என்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online