அட்லியின் அடுத்த பட ஹீரோ கார்த்தி?

201605252140096962_Atlee-next-film-hero-Karthi_SECVPF‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக பிரபலமானவர் அட்லி. இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தெறி வெற்றியை அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து ‘தெறி’ 2ம் பாகம் உருவாகும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அட்லி தரப்பில் இருந்து இது உறுதியாகாத நிலையில், அடுத்ததாக கார்த்தியை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் பேசப்படுகிறது.

இது குறித்து விசாரித்த போது, அட்லி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றும், போலியான செய்திகள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அட்லி விடுமுறை நாட்களில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries