விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர விரும்புகிறேன்: மிர்துளா

201605251553004660_Vijay-Sethupathi-Sivakarthigeyan-with-like-to-pair-mirthula_SECVPFதமிழ்ப்பட உலகில் கொடி கட்டி பிறந்த நடிகைகளில் பலர் கேரளாவை சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து வந்த நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் புதிய வரவுகளில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறார். இன்னும் பலர் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கேரள நடிகை மிர்துளா தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறார். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் தீவிர ரசிகையான இவர், ‘ஆயால் நானுள்ள’ என்ற படத்தில் பகத்பாகிலுடன் நடித்திருக்கிறார். தனது ஆசை பற்றி கூறிய மிர்துளா…

“நான் குழந்தை பருவத்தில் இருந்தே நடிகை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்தேன். தமிழ்நாட்டில் நடிகைகள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு என்னை வியக்க வைக்கிறது.

நான் கேரளாவில் திரையிடப்படும் தமிழ் படங்களை தவறாமல் பார்ப்பேன். தற்போது தமிழ் திரை உலகில் வெற்றிநடை போடும் ஹீரோக்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்பு என்னை கவர்ந்தது.

அவர்கள் தேர்ந்து எடுக்கும் கதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருந்தால் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமையும்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries