உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு

201605272218317474_Simbu-talks-about-body-weight_SECVPFசிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளார்கள். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் குறித்த சில கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்துள்ளார். அவை பின்வருமாறு:-

இது நம்ம ஆளு படம் பார்க்கும் போது உங்கள் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை போல இருக்கிறதே?

படம் எடுக்கும் போதே இயக்குனர் பாண்டிராஜ் என்னிடம் கூறினார், படம் உங்கள் வாழ்க்கையில் நடந்தது போன்றே காட்சிகள் இருக்கும் என்று. என்னுடைய வாழ்க்கை திறந்த புத்தகம் மாதிரி. எல்லாருக்கும் என் வாழ்க்கையில் நடந்தது தெரியும், அதனால் ஒப்புக் கொண்டேன்.

படத்தில் சூரி உங்களை அதிகமாக கிண்டல் செய்கிறாரே?

படத்திற்கு வசனம் எல்லாம் பாண்டிராஜ்தான். எந்த இடத்தில் எந்த வசனம் வர வேண்டும் என்று அவருக்கு தெரியும். ஒரு காட்சியில் என்னை கிண்டல் செய்கிற வசனம் இருந்தால்தான் அந்த காட்சி நன்றாக இருக்கும். அதனால் வைத்தோம். படம் பார்க்கும்போது அந்த காட்சிகள் நன்றாக இருக்கிறது.

உடல் எடை கூடிவிட்டதே?

ஆமாம். உடல் எடை கூடிவிட்டது. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய ரசிகர்களும் மிகவும் வருந்துகிறார்கள். உடல் எடையால் டான்ஸ் ஆட முடியவில்லை.

ஒரு கதாபாத்திரத்திற்காக உடம்பை ஏற்றினேன். மற்றொரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலேயும் உடல் எடை அதிகமாக இருக்க வேண்டும், அதனால்தான் உடல் எடையை குறைக்காமல் இருக்கிறேன். கூடிய விரைவில் உடை எடையை குறைத்து விடுவேன்.

படம் லேட்டாக ரிலீஸ் ஆகிறதே?

‘வாலு’ படமும், ‘இது நம்ம ஆளு’ படமும் சில பிரச்சனைகளால் லேட்டாக ரிலீசானது. என் அப்பாவால் தான் என்னுடைய இரண்டு படங்களின் பிரச்சனைகளை தீர்க்கப்பட்டு வெளியானது. அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இனிமேல் வெளியாகும் படம் எல்லாம் தாமதமாகாது. எந்த பிரச்சனையும் வராது.

திருணம் எப்போது?

நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.

இவ்வாறு சிம்பு பதிலளித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online