கடைசியாக மும்பையில் பாய்கிறது என்னை நோக்கி பாயும் தோட்டா

201605272053385005_Ennai-nokki-paayum-thotta-final-leg-in-mumbai_SECVPFதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

கடைசி கட்டமாக மும்பையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு இரண்டு வாரங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். படத்தின் முக்கியமான காட்சிகளை மும்பையில் படமாக்க இருக்கின்றனர். காதல் படமாக உருவாகி வரும் இதில் தனுஷ் மீசை தாடி இல்லாமல் மிகவும் அழகாக தோற்றமளிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் ‘தொடரி’, ‘கொடி’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online