ரசிகர்களை ஏமாற்றிய அஜித் தயாரிப்பாளர்

201605271805240833_Ajith-fans-disappointed-Producer_SECVPFசமீபகாலமாக ஒவ்வொரு படத்திற்கும் சமூக வலைதளங்களில் அந்த படத்தின் தலைப்பை வைத்து ஒரு புது பக்கத்தை தொடங்கி அதில் படம் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் ‘தல 57’ என்ற புதிய பக்கத்தை இன்று மாலை 5.7 மணியளவில் தொடங்கப் போவதாக அறிவித்தனர்.

அஜித்துக்கு இது 57-வது படம் என்பதால் அந்த படத்தை பற்றிய முதல் அறிவிப்பே அந்த தலைப்புக்கு ஏற்ற மாதிரி இருக்கவேண்டும் என்பதால் 5.7 மணியை தேர்வு செய்தனர். இந்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டிரெண்டாக மாறியது.

புதிதாக தொடங்கப்படும் அந்த பக்கத்தில் தல 57 படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல்கள் வெளியாகும் என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5.7 மணி வரை அவர்கள் கூறியபடி எந்த பக்கமும் தொடங்கப்படவில்லை. மேலும், தல 57 படத்தை பற்றிய அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து இந்த அறிவிப்பை வெளியிட்ட சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமே, தல 57 படத்திற்கான புதிய பக்கம் வேறொரு நாளில் தொடங்கப்படும் என்று அறிவித்தது.

மேலும் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் இந்த படத்தை பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries