மீரா ஜாக்கிரதை பட விவகாரம்: நடிகர் பாபிசிம்ஹா மீது பட அதிபர் புகார்

201605271004059345_Meera-Jakkirathai-Movie-issue-film-productor-complaint-to_SECVPF‘மீரா ஜாக்கிரதை’ என்ற படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்தில், பாபிசிம்ஹா முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக அவரது படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. ஆனால், ‘மீரா ஜாக்கிரதை’ படத்தில் நான் நடிக்கவில்லை என்று பாபிசிம்ஹா மறுப்பு தெரிவித்ததுடன், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தார்.

இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி எட்வர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘‘மீரா ஜாக்கிரதை படத்தை ஜி.கேசவன் இயக்க நான் தயாரித்தேன். இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இணை இயக்குனர் சதீஷ்தான் பாபிசிம்ஹாவை அழைத்து வந்து நடிக்க வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு பாபிசிம்ஹாவுக்கும், டைரக்டருக்கும் தகராறு ஏற்பட்டது.

அவரும் இணை இயக்குனர் சதீசும் சேர்ந்து டைரக்டர் கேசவனை தகாத வார்த்தைகளால் திட்டினர். கீழே தள்ளி அடிக்கவும் முயன்றனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு திருச்செங்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் டைரக்டர் மன உளைச்சலுக்கு ஆளானார். என்னுடைய பணமும் முடங்கியது.

தற்போது படத்துக்கான பிரச்சினைகள் முடிக்கப்பட்டு திரைக்கு கொண்டு வரும் நேரத்தில், ‘மீரா ஜாக்கிதை’ படத்தில் நடிக்கவே இல்லை என்று பாபிசிம்ஹா புகார் அளித்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் இந்த படத்தில் நடித்து இருப்பது உண்மை. எங்கள் மீது அவர் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். படம் திட்டமிட்டபடி திரைக்கு வரும்.’’

இவ்வாறு தயாரிப்பாளர் அந்தோணி எட்வர்ட் அறிக்கையில் கூறி உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries