தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று வெளியாகின்றன

201605270913342641_7-new-films-released-today_SECVPFசட்டமன்ற தேர்தல் பரபரப்பு திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என்ற சந்தேகத்தில், பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரைக்கு கொண்டு வரும் தேதியை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்தனர்.

விஜய்யின் ‘தெறி,’ உதயநிதியின் ‘மனிதன்,’ சூர்யாவின் ‘24’ ஆகிய படங்கள் மட்டும் தேர்தல் பணிகளுக்கு மத்தியில் வெளியானது.

தற்போது தேர்தல் முடிந்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வருகின்றன. விஷாலின் ‘மருது’ படம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளான கடந்த 20-ந்தேதி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

‘இது நம்ம ஆளு,’ ‘உரியடி,’ ‘சுட்டபழம் சுடாத பழம்,’ ‘மீரா ஜாக்கிரதை,’ ‘ஜெனிபர் கருப்பையா’ ஆகிய படங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன. ஹாலிவுட் படமான ‘ஆங்கிரி பேர்ட்ஸ்’ படமும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. ‘கில்ஷோன்-2’ என்ற ஹாலிவுட் படமும் இன்று வெளியாகிறது.

இந்த 7 படங்களும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்து உள்ளன. கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.

காதல் சர்ச்சைகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து இருப்பதால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. காதல் கதையம்சம் உள்ள குடும்ப படமாக இது தயாராகி இருக்கிறது. பாண்டிராஜ் டைரக்டு செய்திருக்கிறார். டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார்.

‘சுட்ட பழம் சுடாத பழம்,’ குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி தயாராகி உள்ளது. சிவா.ஜி. டைரக்டு செய்து இருக்கிறார்.

‘மீரா ஜாக்கிரதை,’ காதல், பழிவாங்கல், நகைச்சுவை, திகில் கலந்த படமாக உருவாகி உள்ளது. இதில் பாபிசிம்ஹா வில்லனாக வருகிறார். கேசவன் டைரக்டு செய்துள்ளார். ‘ஜெனிபர் கருப்பையா,’ காதல் கதையம்சம் உள்ள படம். சரவணபாண்டி டைரக்டு செய்து இருக்கிறார்.

‘உரியடி’ படம், காதல் ஜோடிக்கு உதவும் நண்பர்களின் கதை. இந்த படத்தை விஜய்குமார் டைரக்டு செய்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries